Thursday, April 18, 2019

35. நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை - 4. போக்ரா

யாத்திரையின் ஆறாம் நாளான 8.4.19 அன்று முக்திநாத் தரிசனம் முடிந்து பஸ்ஸில் ஜோம்சோம் திரும்பினோம். இரவில் ஜோம்சோமில் தங்கி விட்டு, 9.4.19 காலை கிளம்பி விமானம் மூலம்  போக்ரா திரும்பினோம்.

நாங்கள் விமானத்தில் போக்ரா வந்து கொண்டிருந்தபோது மேக மூட்டத்தால் விமானம் ஓட்டுவதில் சற்றுத் தடுமாற்றம் ஏற்பட்டு ஓரிரு முறை விமானம் ஏற்ற இறக்கங்களுடன் ஆடிச் சென்றது. ஆயினும் பத்திரமாக போக்ரா வந்தடைந்தோம்.

எங்கள் குழுவினர் கடைசியாக வந்த விமானம் கிளம்பும் சமயம், மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விமானம் செல்ல முடியுமா என்ற சந்தேக நிலை ஏற்பட்டு, பிறகு எங்கள் பயண அமைப்பாளர் இரண்டு விமான நிலையங்களையும் தொடர்பு கொண்டு  பேசி விமானத்தை இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தபின், அவர்கள் விமானத்தை இயக்க ஒப்புக் கொண்டார்கள் என்று அறிந்தோம்.

பிற்பகலில் போக்ராவில் சில இடங்களுக்குச் சென்றோம். முதலில் சென்றது ஜலநாராயண், மற்றும் குப்தேஸ்வர் மகாதேவ் குகை. இவை இரண்டும் ஒரே இடத்தில் இருக்கின்றன. ஜல நாராயண் சிற்பம் காத்மாண்டுவில் உள்ள ஜலநாராயண்  கோவிலில் உள்ள நீரில் மிதந்தபடி சயனித்திருக்கும் விஷ்ணுவின் உருவம் போலவே செய்யப்பட்டுள்ளது.


































இதன் அருகிலேயே ஒரு பெரிய சாளக்கிராமம் ஆதிசேஷன் குடைக்கீழ் இருக்கிறது.





























































இதன் அருகில் தரை மட்டத்துக்குக் கீழே குப்தேஸ்வர் மகாதேவ் குகை இருக்கிறது. இருட்டான இந்த குகை நீண்ட பாதையாக பூமிக்கடியில்  செல்கிறது.   உள்ளே கணபதி, சிவபெருமான் விக்கிரகங்கள் உள்ளன. குகையின் பாதை நீர்க்கசிவால் ஈரமாக இருக்கிறது. உள்ளே சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

























 குப்தேஸ்வர் மகாதேவ் குகையின் எதிர்ப்புறமாக சாலையைக் கடந்து சென்றால், அங்கு டேவிஸ் ஃபால் என்ற சிறிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. 1961ஆம் ஆண்டில் டேவிஸ் என்ற ஸ்விஸ் பெண்மணி இந்த நீர்வீழ்ச்சியில் தன் கணவருடன் குளித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் நினைவாக இந்த நீர்வீழ்ச்சிக்கு டேவிஸ் ஃபால் என்று பெயரிடப்பட்டி ருப்பதாக அங்குள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பூங்காவில் தராய் மட்டத்தனுக்குக் கீழே உள்ள சிறு அருவி, நீரோடைகள், புல்வெளிகள் இருக்கின்றன. இங்கு வருபவர்கள் பல்வேறு தோற்றங்களில் தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவும் வகையில் வித விதமான உடைகள், உடலமைப்புகளுடன் தலையில்லாத பொம்மைகள் (டம்மிகள்) இருக்கின்றன. பொம்மைக்குப் பின்னே நின்று பொம்மையின் தலைப்பகுதியில் நம் தலையை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்!




































சில வீடியோக்கள்




இறுதியாக ஒரு ஏரிக்குச் சென்றோம். இதில் படகு சவாரி செய்யலாம். ஏரிக்கு நடுவே ஒரு கோவில் இருக்கிறது/ அந்தக் கோவிலுக்கும் படகில் செல்லலாம்.




















 இரவு போக்ராவிலிருந்து  பஸ்ஸில் கிளம்பி மறுநாள் காலை காத்மாண்டு வந்து  சேர்ந்தோம். பயணத்தின் இறுதிப்பகுதியான காத்மாண்டு பற்றி அடுத்த பதிவில். 

No comments:

Post a Comment