பத்ரிநாத் யாத்திரையின் நான்காம் நாளான 4.5.18 அன்று காலை பிபல் கோடியிலிருந்து கிளம்பினோம்.
சுமார் 8 மணி அளவில் ஜோஷிமட் (ஜோதிர்மட்) வந்தடைந்தோம். ஜோஷிமட்டில் நரசிங் மந்திர் என்று அழைக்கப்படும் நரசிம்மர் கோவில், அதன் அருகில் உள்ள வாசுதேவப்பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்று வழிபட்டபின் எங்கள் மேல் நோக்கிய பயணத்தைக் தொடர்ந்தோம்.
சுமார் 9.30 மணி அளவில் யோகபத்ரி ஆலயத்தை அடைந்தோம்.
ரிஷிகேஷிலிருந்து பத்ரி செல்லும் சாலையில் ஜோஷிமட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது யோகபத்ரி ஆலயம். (இங்கிருந்து பத்ரிநாத் 23 கிலோமீட்டர்) சாலையிலிருந்து சற்று தூரம் கீழே இறங்கி இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
பாண்டுகேஷ்வர் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் பாண்டு (பஞ்ச பாண்டவர்களின் தந்தை) தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள யோகபத்ரியைக் குறித்துப் பாண்டு தவம் செய்ததால் இது பாண்டுகேஸ்வர் ஆலயம் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்தக் கோவிலில் உள்ள யோகபத்ரி பாண்டுவால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
பாண்டு தன் மனைவிகள் குந்தி, மாத்ரி இருவருடனும் இங்கே தங்கி யிருந்தபோதுதான் பாண்டவர்கள் பிறந்தனர்.
அதன் பிறகு ஒரு சமயம், பாண்டு தன் இரண்டாவது மனைவி மாத்ரியுடன் இணைந்து அதனால் முனிவர் சாபத்தின்படி தலை வெடித்து இறந்ததும், தன் கணவனின் மரணத்துக்குத் தானே பொறுப்பு என்று கருதி மாத்ரி தன் உயிரை மாய்த்துக்கொண்டதும் இந்த இடத்தில்தான்.
வனவாசத்தின்போது பாண்டவர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து தங்கள் தந்தைக்குத் திதி கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறது.
சந்நிதியில் யோகபத்ரியும், லக்ஷ்மிநாராயணரும் இருக்கிறார்கள். மாத்ரியின் விக்க்கிரகமும் சந்நிதிக்குள் இருக்கிறது.
சந்நிதிக்கு வெளியே, சந்நிதியின் வலப்புறத்தில் மகாலக்ஷ்மி சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு இடப்புறத்தில் வாசுதேவர் சந்நிதி இருக்கிறது. இது பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
சிறிய, அழகான ஆலயம். பிரகாரத்திலிருந்து தெரியும் சுற்றுப்புறக் காட்சிகள் ரம்மியமாக இருக்கின்றன..

No comments:
Post a Comment