Wednesday, April 17, 2019

34. நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை - 3. முக்திநாத்


சோனாலி 
யாத்திரையின் நான்காம் நாள் 6.4.19 மாலை சுமார் 7 மணிக்கு இந்திய எல்லையைக்  கடந்து நேபாள எல்லையில் உள்ள சோனாலி என்ற ஊருக்கு  வந்தோம். இரவு இங்கே தங்கி விட்டு,  மறுநாள் காலை 7.4.19 அன்று போக்ராவுக்குக் கிளம்பினோம்.

சோனாலி ஓட்டலிலிருந்து தெரிந்த காட்சி 
சோனாலி ஓட்டலிலிருந்து தெரிந்த காட்சி


































போக்ரா செல்லும் வழியில், நாராயண காட் என்ற இடத்தில் இறங்கிக் கண்டகி நதியில் நீராடி விட்டு, அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு போக்ரா பயணத்தைக் தொடர்ந்தோம்.

கண்டகி நதி உற்பத்தி ஆகும் தாமோதர குண்ட் என்ற இடத்தில்தான் சாளக்கிராமக் கற்கள் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் நாராயண காட் என்ற இந்த இடத்திலேயே, கரையில் மேடான பகுதியில் இருந்த பல கற்களில் சிலவற்றை சாளக்கிராமக் கற்கள் என்று அங்கிருந்த ஒரு மனிதர் கூறினார். சில கற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை நரசிம்மர், ஹயக்ரீவர் என்றெல்லாம் அடையாளம் காட்டினார். சிலர் அந்தக் கற்களை எடுத்துச் சென்றனர். பொதுவாக சாளக்கிராமக் கற்கள் கருப்பாக இருக்கும். ஆனால் இவை வெளிர் நிறத்தில் (grey color) இருந்தன,


நாராயண காட், கண்டகி நதி 
நாராயண காட்,கண்டகி நதி 






















கண்டகி நதி


நாராயண காட், கண்டகி  நதி


நாராயண காட், கண்டகி நதி 





















கண்டகி நதி 





















கண்டகி நதி 


கரையில் ஒரு கோவில் 
கண்டகி நதி, நாராயண காட்




நதிக்கரையில் கோவில் 




கோவில் 
கோவில் 

நாராயண காட்



































































மாலை போக்ரா வந்தடைந்தோம். சோனாலியிலிருந்து போக்ரா சுமார் 190 கிலோமீட்டர்கள் இருக்கும்.

இரவில் போக்ராவில் தங்கி விட்டு, மறுநாள் 7.4.19 அதிகாலை கிளம்பி விமானம் மூலம் ஜோம்சோம் சென்றோம்.

போக்ராவிலிருந்து ஜோம்சோமுக்கு விமானப் பயண நேரம் 20 நிமிடங்கள்தான். ஆனால் விமானம் இரு மலைகளுக்கிடையே செல்ல வேண்டியிருப்பதால் 18 பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யும் சிறிய விமானமே இங்கு பயன்படுத்தப்படுகிறது. விமானங்கள் அதிகாலையிலிருந்து நண்பகல் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மேகமூட்டம் இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விடும்.

விமானம் இல்லையென்றால் ஜீப் மூலம் பயணம் செய்ய வேண்டும். இதற்கு 12 மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும். கரடுமுரடான பாதை என்பதால் பயணம் மிகவும் கடினமாக இருக்கும். விமானம் கிடைத்துப் போவது அதிர்ஷ்ட வசம்தான். போக்ராவிலிருந்து ஜோம்சோமுக்குப் போகவும், (அடுத்த நாள்) திரும்ப வரவும் விமானப் பயணம் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். (இறைவனின் அருள் என்றும் சொல்லலாம் ஆனால் முக்திநாத் செல்லும் சில பக்தர்களுக்கு ஏன் இறைவனின் அருள் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழும்!)

சபர்பன் ரயில்கள் போல் ஷட்டில் அடித்த இரண்டு விமானங்களில் எங்கள் குழுவினர் அனைவரும் அதிகாலை 5 மணிக்குத் துவங்கி, பகுதி பகுதியாக, சுமார் 10 மணி அளவில் ஜோம்சோம் வந்து சேர்ந்தோம். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஓட்டல் லாபியில் சிறிது நேரம் இருந்து விட்டு,  முக்திநாத் நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டமாக கோவில் அடிவாரம் வரை செல்லும் பஸ்ஸில் பயணம் செய்தோம்.

சுமார் 20 கிலோமீட்டர் பஸ் பயணத்துக்குப் பின் கோவில் அடிவாரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து கோவிலுக்கு மலைப்பாங்கான பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். சாய்வான பாதைகளும், படிகளும் அமைந்த பாதை இது.

நடக்க முடியாதவர்கள் குதிரையில் வரலாம். 300 ரூபாய் கட்டணம். குதிரையில் வந்தாலும், இறுதியில் சுமார் 100 படிகள் ஏறித்தான் கோவிலை அடைய வேண்டும்.

அவரவர் உடல் வலுவுக்கு ஏற்ப நடந்தோ, குதிரையில் சென்றோ மதியம் 12 முதல் 1 மணிக்குள் அனைவரும் கோவிலை அடைந்தோம்.























(மேலே) போக்ரா விமான நிலையம் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள்.























ஜோம்சோம்  விமான நிலையம் அமைந்துள்ள சாலை (மேலே, கீழே)




























(மேலே) ஜோம்சோமிலிருந்து பஸ்ஸில் சென்றபோது  வெளியில் தெரிந்த சில காட்சிகள்























முக்திநாத் கோவில் செல்லும் பாதை (மேலே, கீழே)





                                                                                           




















மேலிருந்து திரும்பி வரும் குதிரைகள்

























                                                                                        கோவில் நுழைவு வளைவு


































அடியேன்                       






















வழியில் ஒரு சிறு கோவில். விஷ்ணுவின்  பாதங்களும், ஒரு காலில் தவமிருக்கும் முனிவரும்






















 புத்தர் சிலை (இடது),                              (வலது) ஜ்வாலாமாயி கோவில் செல்லும் வழி தோல மேபார் கோம்பா  என்று ஆங்கிலத்தில் உள்ளது






















                          (மேலே) கோவிலுக்கு அழைத்துச் செல்லும் கடைசிப் படிகள்





















                                                              கோவில் அருகே





















தண்ணீர் பம்ப்                                                                                  முக்திநாத் சந்நிதி
முன்புறம் வலது - பாப் குண்ட்  (பாவக்குளம்), இடது - புண்ய குண்ட்


























 என் மனைவி சித்ரா                                                                     சந்நிதியின் தோற்றம்






















 என் மனைவியும் மற்ற உறவினர்களும்.                   நரசிம்மர் சந்நிதியில் உள்ள                                                                                                                    சாளக்கிராமங்கள்




















                                                     சாளக்கிராமங்கள், நரசிம்மர்























                                           நரசிம்மர் கோவில் - வெளிப்புறம்



















                                                              கீழே இறங்கும்போது


 வீடியோக்கள்


























கோவிலில் உள்ள பாவக்குளத்தில் முதலில் குளித்து, பிறகு பக்கத்தில் உள்ள புண்ய குளத்தில் குளித்து, அதன் பின் சுவர்களில் 108 துவாரங்கள் வழியே சிறு குழாய்கள் மூலம் வரும் நீரில் வரிசையாகக் குளித்த பின் வேறு உடை உடுத்திக்கொண்டு முக்திநாதரை தரிசிக்கலாம். மிக அருகில் (சுமார் 3 அடி தூரத்திலிருந்து) பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு இந்த ஒரு கோவிலில் மட்டும்தான் கிடைக்கும்.

முக்திநாத் சந்நிதிக்கு எதிரே அணையாத ஹோமகுண்டம் இருக்கிறது. அதன் அருகே ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், மணவாள மாமுனிவர் ஆகியோர் விக்கிரகங்கள் உள்ளன. திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகியோர்  இங்கு வந்திருக்கின்றனர்.

திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் ஆகிய இரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட திவ்யதேசம் முக்திநாத்.

தரிசனம் முடித்துக் கீழே இறங்கினோம். பிற்பகலில் இங்கே குளிர் தொடங்கி விடும் என்பதால், சுமார் 2 மணி வாக்கிலே கீழே இறங்கி விடுவது நல்லது - குறிப்பாக சற்று பலவீனமான உடல்நிலை உள்ளவர்கள். கீழே இறங்கும்போது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் இறங்கித்தான் வர வேண்டும்.

கீழே இறங்கி பஸ்ஸில் ஜாமசோம் திரும்பி, இரவு ஜாம்சோமில் தங்கினோம்.

மறுநாள் 9.4.19 அன்று காலை போக்ரா கிளம்பி, போக்ரா, காத்மாண்டு ஆகிய ஊர்கலுக்குச் சென்று அங்கு  நான் கண்ட விஷயங்களை அடுத்த இரு பதிவுகளில் கூறி நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment